• Jan 26 2025

மாற்றங்களை விரும்பாத அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராக தர்க்கம் - அமைச்சர் சுட்டிக்காட்டு

Chithra / Dec 29th 2024, 3:45 pm
image

  

மாற்றங்களை செய்ய முற்படும்போது, அரச ஊழியர்கள் சிலர் அதற்கு எதிராக தர்க்கம் புரிகின்றனர் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக வீதிகளில் போராட வேண்டியிருந்தது. 

மக்களுக்காக ஊழல், இலஞ்சம் மற்றும் திருட்டுக்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம். 

கடந்த காலத்தில், பழைய முறைப்படி எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரச ஊழியர்களுடன் போராட  வேண்டியேற்பட்டது.

மக்கள் வழங்கிய ஆணைக்கமைய, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்த அரசாங்க காலத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான தீர்மானங்களை நாங்கள் எடுக்கும்போது அதற்கெதிராக சில அரச ஊழியர்கள் எம்மோடு தர்க்கம் புரிகின்றனர்.

மாற்றத்தை விரும்பாத மக்களும் மாற வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பல மாற்றங்களை செய்து நாங்கள் எங்களது பயணத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்களை விரும்பாத அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராக தர்க்கம் - அமைச்சர் சுட்டிக்காட்டு   மாற்றங்களை செய்ய முற்படும்போது, அரச ஊழியர்கள் சிலர் அதற்கு எதிராக தர்க்கம் புரிகின்றனர் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக வீதிகளில் போராட வேண்டியிருந்தது. மக்களுக்காக ஊழல், இலஞ்சம் மற்றும் திருட்டுக்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம். கடந்த காலத்தில், பழைய முறைப்படி எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரச ஊழியர்களுடன் போராட  வேண்டியேற்பட்டது.மக்கள் வழங்கிய ஆணைக்கமைய, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்த அரசாங்க காலத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இது தொடர்பான தீர்மானங்களை நாங்கள் எடுக்கும்போது அதற்கெதிராக சில அரச ஊழியர்கள் எம்மோடு தர்க்கம் புரிகின்றனர்.மாற்றத்தை விரும்பாத மக்களும் மாற வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பல மாற்றங்களை செய்து நாங்கள் எங்களது பயணத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement