கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இவர் புத்தளம் பாலாவி பகுதியில் வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். குறித்த நபரை கைது செய்யும் போது அவர் சிரித்த முகத்துடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
34 வயதுடைய முகமது அஸ்மான் ஷெரிப்தீன் எனப்படும் முன்னாள் கொமொண்டோ படையணியின் முன்னாள் படைச்சிப்பாய் எனத் தெரியவந்துள்ளது. அதே சமயம் அவருக்கு உதவியதாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தையும் பகிர்ந்து அது தொடர்பான தகவல்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிரித்த முகத்துடன் கைதாகிய புதுக்கடை நீதிமன்ற படுகொலை துப்பாக்கிதாரி - கைதுசெய்யப்படும் காட்சி கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இவர் புத்தளம் பாலாவி பகுதியில் வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். குறித்த நபரை கைது செய்யும் போது அவர் சிரித்த முகத்துடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது. 34 வயதுடைய முகமது அஸ்மான் ஷெரிப்தீன் எனப்படும் முன்னாள் கொமொண்டோ படையணியின் முன்னாள் படைச்சிப்பாய் எனத் தெரியவந்துள்ளது. அதே சமயம் அவருக்கு உதவியதாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தையும் பகிர்ந்து அது தொடர்பான தகவல்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.