புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெறவிருக்கின்றது.
நாளையதினம் (11.04.2024) வெள்ளி நண்பகல் 12 மணிக்கு பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சதானந்த சசாங்கன் குருக்கள் தலைமையில் உதவிக்குருமார் சிவசித்தர் பொ. சபாரத்தினம் ஐயா, விஸ்வப்பிரம்ம ஸ்ரீ பிரதீசன் ஐயா, விஸ்வப் பிரம்ம ஸ்ரீ அகிலன் ஐயா உதவியுடன் அம்பாளுக்கு விஷேட அபிசேக ஆராதனையும் பட்டு நேர்தலும் இடம்பெற இருக்கின்றது.
அதனை தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட இருக்கின்றது.
தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு விஷேட பூஜையும் , அம்பாள் உள்வீதி உலா வருதலும் இரவு 10 மணிக்கு பண்டமெடுத்தல் நிகழ்வும், இரவு 11 மணிக்கு அணியம் நேர்தல், இரவு 12 மணிக்கு கச்சை நேர்தல், இரவு 2 மணிக்கு வழந்து வைத்தல், இரவு 3.30 மணிக்கு தூளி பிடித்தல், காலை 06 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் என்பன இடம்பெற இருக்கின்றது.
நாளையதினம் இரவு கலைநிகழ்வாக குழுநடனம், தனி நடனமும், தர்மலிங்கம் அண்ணாவியரின் நெறியாழ்கையின் கீழ் நடத்தும் மாலைக்கு வாதாடிய மைந்தன் எனும் புராண நாடகமும் இடம்பெற இருக்கின்றது.
பக்த அடியார்கள் அனைவரும் வருகை தந்து அம்பாளின் இறையருளை வேண்டி தொடர்ந்து இடம்பெறும் அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் வேண்டி நிற்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.
புதுக்குடியிருப்பு துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா -2025 புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெறவிருக்கின்றது.நாளையதினம் (11.04.2024) வெள்ளி நண்பகல் 12 மணிக்கு பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சதானந்த சசாங்கன் குருக்கள் தலைமையில் உதவிக்குருமார் சிவசித்தர் பொ. சபாரத்தினம் ஐயா, விஸ்வப்பிரம்ம ஸ்ரீ பிரதீசன் ஐயா, விஸ்வப் பிரம்ம ஸ்ரீ அகிலன் ஐயா உதவியுடன் அம்பாளுக்கு விஷேட அபிசேக ஆராதனையும் பட்டு நேர்தலும் இடம்பெற இருக்கின்றது. அதனை தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட இருக்கின்றது.தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு விஷேட பூஜையும் , அம்பாள் உள்வீதி உலா வருதலும் இரவு 10 மணிக்கு பண்டமெடுத்தல் நிகழ்வும், இரவு 11 மணிக்கு அணியம் நேர்தல், இரவு 12 மணிக்கு கச்சை நேர்தல், இரவு 2 மணிக்கு வழந்து வைத்தல், இரவு 3.30 மணிக்கு தூளி பிடித்தல், காலை 06 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் என்பன இடம்பெற இருக்கின்றது.நாளையதினம் இரவு கலைநிகழ்வாக குழுநடனம், தனி நடனமும், தர்மலிங்கம் அண்ணாவியரின் நெறியாழ்கையின் கீழ் நடத்தும் மாலைக்கு வாதாடிய மைந்தன் எனும் புராண நாடகமும் இடம்பெற இருக்கின்றது. பக்த அடியார்கள் அனைவரும் வருகை தந்து அம்பாளின் இறையருளை வேண்டி தொடர்ந்து இடம்பெறும் அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் வேண்டி நிற்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.