• Oct 05 2024

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் இக்பால் காலமானார்...!

Sharmi / Jul 6th 2024, 9:37 am
image

Advertisement

சிரேஷ்ட சட்டத்தரணியும், புத்தளம் மாவட்ட பதில்  நீதிவானுமாகிய மஹ்மூத் முஹம்மட் இக்பால் தனது 78 ஆவது வயதில் நேற்று (05) இரவு காலமானார்.

சத்திர சிகிச்சை ஒன்றுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

1971 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இவர், புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில்  சிரேஷ்ட மற்றும் அனுபவம் கொண்ட சட்டத்தரணியாவார்.

சுமார் 53 வருடங்களுக்கும் மேலாக சட்டத்தரணியாக கடமையாற்றி வரும், இவர், சர்ச்சைக்குரிய பல வழக்குகளில் முன்னிலையாகி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்

நீண்ட காலமாக புத்தளம் மாவட்ட பதில் நீதிவானாக கடமையாற்றி வந்த மஹ்மூத் முஹம்மட் இக்பால், புத்தளம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், வடமேல் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் ஐந்து வருடங்கள் உறுப்பினராகவும் கடமையாற்றிள்ளார்.

மேலும், புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் மேம்படுத்தலிலும் , சட்டத்தரணிகளின் நலன்களிலும் மிகவும் அக்கறையுடனும் செயற்பட்டு வந்துள்ளார்.

புத்தளத்தில் சிறந்த சட்டத்தரணியாக பணியாற்றியது மாத்திரமின்றி, இவர் சமூக சேவைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இவர் பாத்திமா இனூசா , சட்டத்தரணி இஸ்னி, இல்தாப் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (06) மாலை 5 மணிக்கு புத்தளம் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் இக்பால் காலமானார். சிரேஷ்ட சட்டத்தரணியும், புத்தளம் மாவட்ட பதில்  நீதிவானுமாகிய மஹ்மூத் முஹம்மட் இக்பால் தனது 78 ஆவது வயதில் நேற்று (05) இரவு காலமானார்.சத்திர சிகிச்சை ஒன்றுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.1971 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இவர், புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில்  சிரேஷ்ட மற்றும் அனுபவம் கொண்ட சட்டத்தரணியாவார்.சுமார் 53 வருடங்களுக்கும் மேலாக சட்டத்தரணியாக கடமையாற்றி வரும், இவர், சர்ச்சைக்குரிய பல வழக்குகளில் முன்னிலையாகி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்நீண்ட காலமாக புத்தளம் மாவட்ட பதில் நீதிவானாக கடமையாற்றி வந்த மஹ்மூத் முஹம்மட் இக்பால், புத்தளம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், வடமேல் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் ஐந்து வருடங்கள் உறுப்பினராகவும் கடமையாற்றிள்ளார்.மேலும், புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் மேம்படுத்தலிலும் , சட்டத்தரணிகளின் நலன்களிலும் மிகவும் அக்கறையுடனும் செயற்பட்டு வந்துள்ளார்.புத்தளத்தில் சிறந்த சட்டத்தரணியாக பணியாற்றியது மாத்திரமின்றி, இவர் சமூக சேவைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.இவர் பாத்திமா இனூசா , சட்டத்தரணி இஸ்னி, இல்தாப் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.அன்னாரின் ஜனாஸா இன்று (06) மாலை 5 மணிக்கு புத்தளம் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement