• Nov 06 2024

கொலைச் சந்தேகநபரை ஊடகங்கள் முன் விசாரிப்பதா? - சபையில் அமைச்சர் விஜயதாச அதிருப்தி

Chithra / Jul 12th 2024, 1:34 pm
image

Advertisement

 

கிளப் வசந்த கொலையில் சந்தேகநபர் ஒருவரை ஊடகங்கள் முன்னிலையில் விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நீதிச் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறிய அமைச்சர், தற்போது பொலிஸ் வழக்கை விசாரித்ததால் நீதிபதிகளை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

பொலிஸார் வழக்கை விசாரித்தனர். நீதிபதிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இத்தகைய அதிகாரிகளை வைத்து எப்படி குற்ற வழக்குகளை விசாரிப்பது. குற்ற வழக்குகளை இவ்வாறு தீர்க்க முடியுமா? இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது இந்த நாட்டு மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இது நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

கொலைச் சந்தேகநபரை ஊடகங்கள் முன் விசாரிப்பதா - சபையில் அமைச்சர் விஜயதாச அதிருப்தி  கிளப் வசந்த கொலையில் சந்தேகநபர் ஒருவரை ஊடகங்கள் முன்னிலையில் விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நீதிச் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறிய அமைச்சர், தற்போது பொலிஸ் வழக்கை விசாரித்ததால் நீதிபதிகளை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பொலிஸார் வழக்கை விசாரித்தனர். நீதிபதிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.இத்தகைய அதிகாரிகளை வைத்து எப்படி குற்ற வழக்குகளை விசாரிப்பது. குற்ற வழக்குகளை இவ்வாறு தீர்க்க முடியுமா இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது இந்த நாட்டு மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இது நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement