வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவின்மை காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் அத்துல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.
நாய் கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவிக்கின்றார்
வெறிநாய்க்கடி நோய் - இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள் சுகாதார அமைச்சு எச்சரிக்கை வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவின்மை காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் அத்துல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.நாய் கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவிக்கின்றார்