• May 20 2024

வடக்கு, கிழக்கில் இன்று முதல் வெப்பசலன மழை! இடி, மின்னல் தொடர்பில் கடும் எச்சரிக்கை

Chithra / May 8th 2024, 7:53 am
image

Advertisement

 


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று(8) முதல் வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா,  இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும். எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ஆம் திகதிக்குப் பின்னர் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும். (இது இன்றைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலான கணிப்பாகும். இதில் சில மாற்றங்களும் நிகழலாம்) 

ஆனாலும் இக் காலத்தில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள் பங்களாதேஷ் அல்லது மியன்மாரை நோக்கியே செல்வதுண்டு. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும். 

எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு தற்போது நிலவும் அதிகளவிலான வெப்பநிலையே நிலவும் எனத்தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இன்று முதல் வெப்பசலன மழை இடி, மின்னல் தொடர்பில் கடும் எச்சரிக்கை  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று(8) முதல் வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா,  இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும். எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ஆம் திகதிக்குப் பின்னர் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும். (இது இன்றைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலான கணிப்பாகும். இதில் சில மாற்றங்களும் நிகழலாம்) ஆனாலும் இக் காலத்தில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள் பங்களாதேஷ் அல்லது மியன்மாரை நோக்கியே செல்வதுண்டு. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும். எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு தற்போது நிலவும் அதிகளவிலான வெப்பநிலையே நிலவும் எனத்தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement