தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் வேலைத்திட்டத்தையே ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போது அதனையே பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இந்த திட்டத்தில் சஜித் பிரேமதாசவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா முதலில் சாதிப்பது என்பதில் தான் எல்லாமே தங்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத்தை புறக்கணித்த போதிலும், ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் அந்த தீர்மானத்தை நிராகரித்து பாராளுமன்றத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது.
இதில் சரத் பொன்சேகா அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும், சரத் பொன்சேகா நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய அமர்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை - ரணிலுடன் இணையும் ராஜித. தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் வேலைத்திட்டத்தையே ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போது அதனையே பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.இந்த திட்டத்தில் சஜித் பிரேமதாசவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா முதலில் சாதிப்பது என்பதில் தான் எல்லாமே தங்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத்தை புறக்கணித்த போதிலும், ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் அந்த தீர்மானத்தை நிராகரித்து பாராளுமன்றத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது. இதில் சரத் பொன்சேகா அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்திருந்தார்.மேலும், சரத் பொன்சேகா நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய அமர்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.