• May 03 2024

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிராக பேரணிகள்...! ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்..!samugammedia

Sharmi / Jan 20th 2024, 8:19 am
image

Advertisement

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை,கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டமூலங்களை நிறைவேற்றி வருகின்றமை உட்பட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் நடத்தப்படவுள்ளன.

அதற்கமைய இதன் முதலாவது பேரணி எதிர்வரும் 30ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். 

இதேவேளை கடந்த 9 ஆம் திகதி முதல் 5 நாட்களாக பல்வேறு கட்டங்களின் கீழ் சுகாதார தொழிற்சங்கத்தினரால் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுகளுடன் கலந்துரையாடிய போதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

எனவே, தமது பிரச்சினைக்கான தீர்வுக்காக அரசாங்கத்திற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தீர்வு வழங்கப்படாவிடின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிராக பேரணிகள். ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்.samugammedia நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை,கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டமூலங்களை நிறைவேற்றி வருகின்றமை உட்பட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் நடத்தப்படவுள்ளன.அதற்கமைய இதன் முதலாவது பேரணி எதிர்வரும் 30ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். இதேவேளை கடந்த 9 ஆம் திகதி முதல் 5 நாட்களாக பல்வேறு கட்டங்களின் கீழ் சுகாதார தொழிற்சங்கத்தினரால் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுகளுடன் கலந்துரையாடிய போதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.எனவே, தமது பிரச்சினைக்கான தீர்வுக்காக அரசாங்கத்திற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தீர்வு வழங்கப்படாவிடின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement