• Nov 17 2024

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாக்க கோரி பேரணி- வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு..!

Sharmi / Sep 4th 2024, 4:02 pm
image

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர்   அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று  (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் வடமாகாண கடற்தொழிலாளர்களும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்களும் இணைந்து 'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில்  குறித்த பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த பேரணி ஊடாக இலங்கை ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.

மன்னார் வளத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மகஜரையும் கையளிக்கவுள்ளோம்.

மன்னார் மக்களுக்கும் மீனவர்களுக்கும்,பாதிப்பாக இருக்கின்ற கணிய மணல் அகழ்வு,காற்றாலை மின் உற்பத்தி, இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை, சூழலுக்கும்,மன்னார் மாவட்டத்திற்கு பாதிப்பான பண்ணை செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் குறித்த அமைதி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பேரணிக்கு யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மீனவர்கள் ஆதரவு வழங்க உள்ளனர்.

னவே அன்றைய தினம் மன்னார் மாவட்ட மீனவர்கள்,பொது அமைப்புக்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என அன்னலிங்கம் அன்னராசா  கோரிக்கை விடுத்தார்.


மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாக்க கோரி பேரணி- வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு. மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர்   அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.மன்னாரில் இன்று  (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் வடமாகாண கடற்தொழிலாளர்களும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்களும் இணைந்து 'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில்  குறித்த பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.குறித்த பேரணி ஊடாக இலங்கை ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.மன்னார் வளத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மகஜரையும் கையளிக்கவுள்ளோம்.மன்னார் மக்களுக்கும் மீனவர்களுக்கும்,பாதிப்பாக இருக்கின்ற கணிய மணல் அகழ்வு,காற்றாலை மின் உற்பத்தி, இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை, சூழலுக்கும்,மன்னார் மாவட்டத்திற்கு பாதிப்பான பண்ணை செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் குறித்த அமைதி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.குறித்த பேரணிக்கு யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மீனவர்கள் ஆதரவு வழங்க உள்ளனர்.எனவே அன்றைய தினம் மன்னார் மாவட்ட மீனவர்கள்,பொது அமைப்புக்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என அன்னலிங்கம் அன்னராசா  கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement