இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திமுக எம் எல் ஏ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தது.
இதில் பலரை நிபந்தனைகளுடன் அந்த இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ராபர்ட், ஜான் பிரிட்டோ, சாம்சன், நெல்சன், நம்பு முருகன் ஆகிய 5 மீனவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் எதிரே நேற்று முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினர்.
ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் என ஏராளமானோர் திரண்டு நேற்று காலை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர்.
5 மீனவர்களை மீட்பது மட்டுமின்றி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படை வசமுள்ள தமிழகத்தை சேர்ந்த 151 விசைப்படகுகளை மீட்டு தரவும், மீட்க முடியாமல் முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.30 லட்சம் வீதம் இழப்பீடாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளை மீட்புக்குழு சென்று மீட்டு வர அரசு உரிய அனுமதி வழங்க வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடந்தது.
இரண்டவது நாளாக இன்றும் உண்ணா விரத போராட்டம் நீடித்தது.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இன்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்எல்ஏ உறுதி அளித்தார். இந்த உறுதியை ஏற்று மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிக வாபஸ். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.திமுக எம் எல் ஏ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தது. இதில் பலரை நிபந்தனைகளுடன் அந்த இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ராபர்ட், ஜான் பிரிட்டோ, சாம்சன், நெல்சன், நம்பு முருகன் ஆகிய 5 மீனவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் எதிரே நேற்று முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினர். ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் என ஏராளமானோர் திரண்டு நேற்று காலை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர்.5 மீனவர்களை மீட்பது மட்டுமின்றி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படை வசமுள்ள தமிழகத்தை சேர்ந்த 151 விசைப்படகுகளை மீட்டு தரவும், மீட்க முடியாமல் முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.30 லட்சம் வீதம் இழப்பீடாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளை மீட்புக்குழு சென்று மீட்டு வர அரசு உரிய அனுமதி வழங்க வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடந்தது. இரண்டவது நாளாக இன்றும் உண்ணா விரத போராட்டம் நீடித்தது.இந்த நிலையில், திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இன்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்எல்ஏ உறுதி அளித்தார். இந்த உறுதியை ஏற்று மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.