• Sep 19 2024

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து ரங்க பண்டார நீக்கம்?

Chithra / Aug 30th 2024, 11:14 am
image

Advertisement

 

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை நியமிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வரும் பாலித ரங்கே பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரங்கே பண்டாரவை பதவியிலிருந்து நீக்குவது குறித்த கடிதத்தில் இன்றைய தினம் ரணில், கையொப்பமிடுவார் என கட்சித் தகவல்களை தெரிவிக்கின்றன.

கட்சியின் முகாமைத்துவ குழு நேற்று முன்தினம் கூடிய போது ரங்கே பண்டாரவை பதியில் இருந்து நீக்குவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ரங்கே பண்டார தனது பங்களிப்பினை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் கட்சித் தலைமைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, தாம் பதவி விலகவோ அல்லது கட்சித் தாவவோ இல்லை என பாலித ரங்கே பண்டார ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்திருந்தார். 


ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து ரங்க பண்டார நீக்கம்  ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை நியமிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வரும் பாலித ரங்கே பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், ரங்கே பண்டாரவை பதவியிலிருந்து நீக்குவது குறித்த கடிதத்தில் இன்றைய தினம் ரணில், கையொப்பமிடுவார் என கட்சித் தகவல்களை தெரிவிக்கின்றன.கட்சியின் முகாமைத்துவ குழு நேற்று முன்தினம் கூடிய போது ரங்கே பண்டாரவை பதியில் இருந்து நீக்குவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ரங்கே பண்டார தனது பங்களிப்பினை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் கட்சித் தலைமைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.இதேவேளை, தாம் பதவி விலகவோ அல்லது கட்சித் தாவவோ இல்லை என பாலித ரங்கே பண்டார ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்திருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement