கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பஸ்ஸின் அதிவேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பஸ் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் முன் இடது பகுதி சேதமடைந்துள்ளது.
பஸ் பாலத்தில் மோதியவுடன், பஸ்ஸில் இருந்த 5 பயணிகளும் ஆற்றில் விழுந்ததுடன், பொதுமக்கள் அவர்களை மீட்டனர்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கை,கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதிய பஸ்; 7 பேர் வைத்தியசாலை அனுமதி கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.பஸ்ஸின் அதிவேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பஸ் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் முன் இடது பகுதி சேதமடைந்துள்ளது.பஸ் பாலத்தில் மோதியவுடன், பஸ்ஸில் இருந்த 5 பயணிகளும் ஆற்றில் விழுந்ததுடன், பொதுமக்கள் அவர்களை மீட்டனர்.இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கை,கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.