வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்றையதினம்(30) நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ் மாவட்டம்
யாழ் மாவட்டத்தில் கவனயீர்ப்பு பேரணியானது இன்றையதினம்(30) காலை 10 மணியளவில் யாழ் ஆரிய குளம் சந்திக்கு அருகாமையில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதி வழியாக முனீஸ்வரர் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
குறித்த போராட்டத்தில் கற்பூர சட்டிகள் மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் நீதி கோரி கோசங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மத தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் தரப்பினர்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இடம்பெற்றது.
OMP ஒரு ஏமாற்று நாடகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை, சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக் கூறலை நாங்கள் கோருகிறோம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் ஈகைச் சுடரினை ஏற்றியும் நீதி கோரிய கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டதுடன் இதன்போது சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல் தரப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது பேரணியாக கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று, அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என தெரிவித்து தேங்காய் உடைக்கப்பட்டது.
இதில் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு பேரணி. வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்றையதினம்(30) நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ் மாவட்டம்யாழ் மாவட்டத்தில் கவனயீர்ப்பு பேரணியானது இன்றையதினம்(30) காலை 10 மணியளவில் யாழ் ஆரிய குளம் சந்திக்கு அருகாமையில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதி வழியாக முனீஸ்வரர் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.குறித்த போராட்டத்தில் கற்பூர சட்டிகள் மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் நீதி கோரி கோசங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்திருந்தனர்.குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மத தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் தரப்பினர்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.திருகோணமலை மாவட்டம்திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இடம்பெற்றது.OMP ஒரு ஏமாற்று நாடகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை, சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக் கூறலை நாங்கள் கோருகிறோம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் ஈகைச் சுடரினை ஏற்றியும் நீதி கோரிய கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டதுடன் இதன்போது சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.குறித்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல் தரப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.கிளிநொச்சிகிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது பேரணியாக கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று, அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என தெரிவித்து தேங்காய் உடைக்கப்பட்டது.இதில் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.