• Aug 23 2025

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட ரணில்; படையெடுத்த ஆதரவாளர்களால் பதற்றம்!

Chithra / Aug 22nd 2025, 4:11 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு  அதிரடியாகப்  படையெடுத்துள்ளனர்.

இதனால், குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகம் மற்றும் கொழும்பு நீதிமன்றம்  அருகே  பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

கடந்த ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

இந்தநிலையில் இது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியும் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க  பலத்த பாதுகாப்புடன் கொழும்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.

நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகே குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, 2023 செப்டம்பரில் லண்டன், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது.

மேலும், 2023 செப்டம்பர் 22 அன்று வோல்வர்ஹாம்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு மதிய உணவு விருந்தில் அவர்கள் பங்கேற்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அ‍தேநேரம், ரணில் விக்ரமசிங்க அரசு நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தவில்லை என்று கட்சி வலியுறுத்தி, குற்றச்சாட்டுகளை அவர் முன்பு மறுத்ததை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.


பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட ரணில்; படையெடுத்த ஆதரவாளர்களால் பதற்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு  அதிரடியாகப்  படையெடுத்துள்ளனர்.இதனால், குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகம் மற்றும் கொழும்பு நீதிமன்றம்  அருகே  பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.கடந்த ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.இந்தநிலையில் இது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியும் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க  பலத்த பாதுகாப்புடன் கொழும்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகே குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, 2023 செப்டம்பரில் லண்டன், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது.மேலும், 2023 செப்டம்பர் 22 அன்று வோல்வர்ஹாம்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு மதிய உணவு விருந்தில் அவர்கள் பங்கேற்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அ‍தேநேரம், ரணில் விக்ரமசிங்க அரசு நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தவில்லை என்று கட்சி வலியுறுத்தி, குற்றச்சாட்டுகளை அவர் முன்பு மறுத்ததை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement