• May 09 2024

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பறக்கும் ரணில்..! samugammedia

Chithra / May 22nd 2023, 7:28 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.05.2023) சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த ஐந்து நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல விடயங்கள் குறித்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாட உள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பறக்கும் ரணில். samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.05.2023) சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த ஐந்து நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல விடயங்கள் குறித்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாட உள்ளார்.இந்தநிலையில் ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement