• Sep 22 2024

தமிழர்களை அடக்க நினைக்கும் ரணில் அரசு: மக்களின் எழுச்சிப் பயணம் என்றும் அடங்காது- வேலன் சுவாமிகள் சபதம்!

Sharmi / Jan 16th 2023, 11:40 am
image

Advertisement

தமிழர்களை ரணில் அரசு அடக்க நினைத்தாலும் தமிழ் மக்களின் போராட்டம் அடங்காது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

தேசிய பொங்கல் நிகழ்விற்காக யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்திருந்த இன்றைய(15) போராட்டத்தில் மதகுருமார்கள், சிவில் சமூகங்கள்,பாதிக்கப்பட்ட தரப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள்,மாணவர்கள் என்று அனைவரும் முழுமையாக இல்லாவிடினும் அங்காங்கே பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி இருந்தனர்.

இங்கு ஸ்ரீலங்கா பொலீஸ்  அராஜகத்தாலே எங்களுடைய ஜனநாயகம் முடக்கப்பட்டு இருக்கிறது. இது இன்று ஸ்ரீலங்காவினுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க இப்படியொரு நாடகத்தை ஆடுகின்றார்.சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டிருப்பதை இன்றைய(15) இந்த சம்பவம் காவல்துறையினுடைய போலித்தனம் மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது. 

நாங்கள் கூறினோம் எங்களை போக விடுங்கள் அல்லது விட முடியாது என்று சொல்லுங்கள் என, ஆனால் இரண்டையும் சொல்லாது நேரத்தை கடத்தினார்கள்.பிறகு பொலிஸ் அதிகாரி வந்து கூறினார். பெரியவரிடம் கேட்டு சொல்லுகின்றோம் என்று, அதன் பிறகு ஆனால் ஜனாதிபதி போய்விட்டார்  என கூறினார்கள்

ஆனால் ஜனாதிபதி போய்விட்டார் என  பொலீஸ் அதிகாரிகளே  என எமக்கு பொய் கூறியுள்ளார்கள் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. ஜனாதிபதி போய் விட்ட பின்னர் கூட விடவில்லை. அதற்கு பின்னரும் வரிசையாக நிற்கின்றார்கள். 

இங்கே ஜனநாயக ரீதியில் இருக்க கூடிய பெண்கள்,பாதிக்கப்பட்ட தரப்புகள்,மதகுருமார்கள் இணைந்து போராடுகின்ற பொழுது நீங்கள் உங்களுடைய அராஜகத்தையும் ஸ்ரீலங்கா அரசு என்ற பலத்தையும் வைத்து எங்களை அடக்கும் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

ரணில் அரசு ஆடுகின்ற நாடகத்தை நாங்கள் நம்பமாட்டோம். இதை எமது தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். 

தமிழர்களாக மக்கள் எழுச்சி வடகிழக்கிலே தொடர்ந்து நடைபெற வேண்டும்.எங்களுடைய உரிமைகளை எமது எழுச்சியின் மூலமாகவே நாம் பெற்று கொள்ள முடியும். ஆகவே யாரை நம்பியும் பயனிலை.

தமிழ் மக்களாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எழுச்சி அடைவோமாக இருந்தால், தமிழர்களுடைய தாகம் தமிழீழ தாயகமாக இந்த மண்ணிலே மலரும் என்ற அடிப்படையிலே இந்த  போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி  இயக்கம் இன்று(15) தேசிய பொங்கல் விழா என்ற பெயரிலே நடக்கின்ற இந்த ஜனநாயக மீறலை, அத்து மீறலை, வழிபாட்டு சுதந்திரத்தை, வழிபட்டு உரிமைகளை, வழிபாட்டிற்கு சிவன் ஆலயத்திற்கு செல்ல விடாது தடுக்கின்ற உரிமைகளை, பொங்கல் விழாவை கேவலப்படுத்தும் விடையத்தை நாங்கள் பொறுத்து கொண்டிருக்க முடியாது.மக்கள் எழுச்சியடைந்து படிப்படியாக எம் இலக்கை நோக்கிய பயணம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களை அடக்க நினைக்கும் ரணில் அரசு: மக்களின் எழுச்சிப் பயணம் என்றும் அடங்காது- வேலன் சுவாமிகள் சபதம் தமிழர்களை ரணில் அரசு அடக்க நினைத்தாலும் தமிழ் மக்களின் போராட்டம் அடங்காது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.தேசிய பொங்கல் நிகழ்விற்காக யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்திருந்த இன்றைய(15) போராட்டத்தில் மதகுருமார்கள், சிவில் சமூகங்கள்,பாதிக்கப்பட்ட தரப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள்,மாணவர்கள் என்று அனைவரும் முழுமையாக இல்லாவிடினும் அங்காங்கே பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி இருந்தனர்.இங்கு ஸ்ரீலங்கா பொலீஸ்  அராஜகத்தாலே எங்களுடைய ஜனநாயகம் முடக்கப்பட்டு இருக்கிறது. இது இன்று ஸ்ரீலங்காவினுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க இப்படியொரு நாடகத்தை ஆடுகின்றார்.சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டிருப்பதை இன்றைய(15) இந்த சம்பவம் காவல்துறையினுடைய போலித்தனம் மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது. நாங்கள் கூறினோம் எங்களை போக விடுங்கள் அல்லது விட முடியாது என்று சொல்லுங்கள் என, ஆனால் இரண்டையும் சொல்லாது நேரத்தை கடத்தினார்கள்.பிறகு பொலிஸ் அதிகாரி வந்து கூறினார். பெரியவரிடம் கேட்டு சொல்லுகின்றோம் என்று, அதன் பிறகு ஆனால் ஜனாதிபதி போய்விட்டார்  என கூறினார்கள்ஆனால் ஜனாதிபதி போய்விட்டார் என  பொலீஸ் அதிகாரிகளே  என எமக்கு பொய் கூறியுள்ளார்கள் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. ஜனாதிபதி போய் விட்ட பின்னர் கூட விடவில்லை. அதற்கு பின்னரும் வரிசையாக நிற்கின்றார்கள். இங்கே ஜனநாயக ரீதியில் இருக்க கூடிய பெண்கள்,பாதிக்கப்பட்ட தரப்புகள்,மதகுருமார்கள் இணைந்து போராடுகின்ற பொழுது நீங்கள் உங்களுடைய அராஜகத்தையும் ஸ்ரீலங்கா அரசு என்ற பலத்தையும் வைத்து எங்களை அடக்கும் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.ரணில் அரசு ஆடுகின்ற நாடகத்தை நாங்கள் நம்பமாட்டோம். இதை எமது தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். தமிழர்களாக மக்கள் எழுச்சி வடகிழக்கிலே தொடர்ந்து நடைபெற வேண்டும்.எங்களுடைய உரிமைகளை எமது எழுச்சியின் மூலமாகவே நாம் பெற்று கொள்ள முடியும். ஆகவே யாரை நம்பியும் பயனிலை.தமிழ் மக்களாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எழுச்சி அடைவோமாக இருந்தால், தமிழர்களுடைய தாகம் தமிழீழ தாயகமாக இந்த மண்ணிலே மலரும் என்ற அடிப்படையிலே இந்த  போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி  இயக்கம் இன்று(15) தேசிய பொங்கல் விழா என்ற பெயரிலே நடக்கின்ற இந்த ஜனநாயக மீறலை, அத்து மீறலை, வழிபாட்டு சுதந்திரத்தை, வழிபட்டு உரிமைகளை, வழிபாட்டிற்கு சிவன் ஆலயத்திற்கு செல்ல விடாது தடுக்கின்ற உரிமைகளை, பொங்கல் விழாவை கேவலப்படுத்தும் விடையத்தை நாங்கள் பொறுத்து கொண்டிருக்க முடியாது.மக்கள் எழுச்சியடைந்து படிப்படியாக எம் இலக்கை நோக்கிய பயணம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement