• May 17 2026

கோட்டாபய செய்ததையே ரணிலும் தற்போது செய்கிறார்...! ஜனவரியில் பூகம்பம் வெடிக்கும்...! விமல் எச்சரிக்கை...!samugammedia

Ziya / Dec 1st 2023, 10:02 am
image

எமக்கு ஏற்பட்ட நிலையே தற்போது ரொஷான் ரணசிங்கவுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெறும் தவறை அன்று நானும்,  உதய கம்மன்பிலவும் சுட்டிக்காட்டியபோது அமைச்சரவையில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்.

அதுபோலவே ரொஷான் ரணசிங்கவும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். அரசின் வீழ்ச்சி பயணம் ஆரம்பித்துவிட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. 

இது இத்துடன் நின்று விடாது. ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் பூகம்பம் வெடிக்கும்.

ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பிலேயே விமர்சனம் முன்வைத்தார். 

இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோட்டாபய செய்ததையே ரணிலும் தற்போது செய்கிறார். ஜனவரியில் பூகம்பம் வெடிக்கும். விமல் எச்சரிக்கை.samugammedia எமக்கு ஏற்பட்ட நிலையே தற்போது ரொஷான் ரணசிங்கவுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெறும் தவறை அன்று நானும்,  உதய கம்மன்பிலவும் சுட்டிக்காட்டியபோது அமைச்சரவையில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்.அதுபோலவே ரொஷான் ரணசிங்கவும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். அரசின் வீழ்ச்சி பயணம் ஆரம்பித்துவிட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. இது இத்துடன் நின்று விடாது. ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் பூகம்பம் வெடிக்கும்.ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பிலேயே விமர்சனம் முன்வைத்தார். இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement