• Nov 11 2024

வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியவரே ரணில் - யாழில் அங்கஜன் புகழாரம்..!

Sharmi / Aug 27th 2024, 6:55 pm
image

நாடு பொருளாதார ரீதியில் சிக்கித் தவிர்த்த போது மக்கள் மூச்சு விடமுடியாத நிலையில் மூச்சுவிட வைத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்றையதினம்(27) இடம்பெற்ற அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள்-இளையோர் இடையே இடம்பெற்ற விசேட கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு பொருளாதார ரீதியில் சரிந்து நின்ற போது நாட்டை பொறுப்பெடுத்தார்.

வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தினார்.

அவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.  ஏனெனில் அடுத்த தடவை அவரால் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்படும்.

ஏனெனில் அவரது வயது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்களை வழங்காத நிலையில் அக் காலத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என பின்னர் சிந்திக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பிரச்சினையாக அரசியல் பொருளாதாரம் பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் அதனை தீர்க்கும் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குவதே தமிழ் மக்கள் பேரம் பேசுவதற்கு சாதகமாக அமையும்.

தற்போது பொது வேட்பாளர் என தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பெறுபேறுகள் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும்.

நான் மக்களின் பொருளாதார அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு 25 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தொழில் கல்வியை வழங்கி வருகிறோம்.

அவர்கள் தாய் நாட்டில் இருந்து கொண்டு தொழில் செய்வதற்கான வேலைத்திட்டத்தினையை மேற்கொண்டு வருகின்றேன்.

எனெனில் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இருந்து இளைஞர்கள் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை தடுக்காமல் தமிழீழத்தை பெற்று பயன் கிடைக்காது.

ஆகவே, இளைஞர் யுவதிகள் தமது எதிர்கால அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற தலைமைத்துவத்தை சரியான முறையில் தெரிவு செய்வது காலத்தின் தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராஜா கஜேந்திரன் முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியவரே ரணில் - யாழில் அங்கஜன் புகழாரம். நாடு பொருளாதார ரீதியில் சிக்கித் தவிர்த்த போது மக்கள் மூச்சு விடமுடியாத நிலையில் மூச்சுவிட வைத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்றையதினம்(27) இடம்பெற்ற அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள்-இளையோர் இடையே இடம்பெற்ற விசேட கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றேன்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு பொருளாதார ரீதியில் சரிந்து நின்ற போது நாட்டை பொறுப்பெடுத்தார்.வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தினார்.அவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.  ஏனெனில் அடுத்த தடவை அவரால் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்படும்.ஏனெனில் அவரது வயது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்களை வழங்காத நிலையில் அக் காலத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என பின்னர் சிந்திக்கக் கூடாது.தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பிரச்சினையாக அரசியல் பொருளாதாரம் பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் அதனை தீர்க்கும் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குவதே தமிழ் மக்கள் பேரம் பேசுவதற்கு சாதகமாக அமையும்.தற்போது பொது வேட்பாளர் என தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பெறுபேறுகள் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும்.நான் மக்களின் பொருளாதார அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு 25 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தொழில் கல்வியை வழங்கி வருகிறோம்.அவர்கள் தாய் நாட்டில் இருந்து கொண்டு தொழில் செய்வதற்கான வேலைத்திட்டத்தினையை மேற்கொண்டு வருகின்றேன்.எனெனில் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இருந்து இளைஞர்கள் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை தடுக்காமல் தமிழீழத்தை பெற்று பயன் கிடைக்காது.ஆகவே, இளைஞர் யுவதிகள் தமது எதிர்கால அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற தலைமைத்துவத்தை சரியான முறையில் தெரிவு செய்வது காலத்தின் தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராஜா கஜேந்திரன் முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement