• Oct 30 2024

ரணில் நாளை லண்டன் பயணம்! – உலகத் தலைவர்களுடன் பேச்சு! samugammedia

Tamil nila / May 3rd 2023, 3:42 pm
image

Advertisement

இலண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

இலண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

1953 ஆம் ஆண்டு, மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 8 ஆயிரத்து 200 பேரிலிருந்தும் இம்முறை கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 200 பேருக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை இலண்டன் செல்லவுள்ளார். நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள உலகத் தலைவர்களுடன் அவர் பேச்சும் நடத்தவுள்ளார்.


 

ரணில் நாளை லண்டன் பயணம் – உலகத் தலைவர்களுடன் பேச்சு samugammedia இலண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.இலண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.1953 ஆம் ஆண்டு, மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 8 ஆயிரத்து 200 பேரிலிருந்தும் இம்முறை கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 200 பேருக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை இலண்டன் செல்லவுள்ளார். நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள உலகத் தலைவர்களுடன் அவர் பேச்சும் நடத்தவுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement