IMF கூறியதால் வேறு வழியின்றி தொழிற்சாலைகளை விற்பனை செய்கின்றோம் என்று முன்னைய அரசாங்கம் பொய் கூறியதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
எனது அமைச்சிலுள்ள நிறுவனங்களை எடுத்துப்பார்த்தால் புல்மோட்டை கனிய மண் நிறுவனம் இருக்கிறது. அங்கு எண்பதாயிரம் மெட்ரிக் தொன் இல்மனைட் இருக்கிறது. அதனை விற்பனை செய்யமுடியாத நிலைமை காணப்படுகிறது.
கொடுக்கல் வாங்கல் செய்த வர்த்தகர் ஒருவர் இப்பொழுது அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருக்கிறார். இரண்டு மூன்று பேர் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு அரச நிறுவனங்களுக்கு எதிராக இப்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
பரந்தன் இரசாயன தொழிற்சாலை இருக்கிறது. அதன் அலுவலகம் ரத்மலானையில் இருக்கிறது. அதனை பரந்தனுக்கு ஏற்றவாறு நாம் உருவாக்கவேண்டும்.
இவ்வாறு ஒரு சில உதாரணங்களையே நான் கூறியுள்ளேன். வெளிநாடுகளிலிருந்து எவ்வளவு இரசாயனங்களை நாம் கொண்டுவருகிறோம். எவ்வளவு உரத்தை கொண்டுவருகிறோம். பொசுபேற்று, யூரியா போன்றவற்றை நாம் உற்பத்தி செய்யமுடியும். ஆனால் இன்னும் நாம் அதற்கான முயற்சிகளை செய்யவில்லை.
அமைச்சரவைப் பத்திரங்களை கொண்டுவந்து சரியான வெளிப்படைத்தன்மை கொண்ட கேள்விப்பத்திரங்களைக் கொண்டுஇந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் வழங்க நங்கள் முயற்சி செய்வோம். இதன் மூலம் எமக்கு சரியான முறையில் உரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
எனது அமைச்சின் கீழ் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனம் இருக்கிறது. அதன் கீழ் 50 தொழிற்பேட்டைகள் காணப்படுகின்றன. ஓர் அமைச்சர் தனது பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த நிறுவனத்தை பெற்றுக்கொடுப்பார்.
அந்த அமைச்சரின் நண்பர் என்ற வகையில் அவர்கள் தாங்கள் நினைத்தபடி உணவை உற்பத்தி செய்வார்கள் அல்லது தளபாடங்களை உற்பத்தி செய்வார்கள்.
சீனிக்கைத்தொழிற்சாலையை எடுத்துப்பார்த்தால் ஆசியாவுக்கே சீனியை விற்பனை செய்யக்கூடிய ஒரு தொழிற்சாலையை நாம் வைத்திருந்தோம். ஆனால் உங்கள் நண்பர்கள் தான் இதை நடத்தி சென்றார்கள். தங்கள் உற்பத்தி செய்யும் சீனியை கொண்டுசெல்லமல் அதனை தேக்கிவைத்துக்கொண்டிருக்கிறார்கள். செவனகல களஞ்சியத்தில் அந்த சீனியை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்கள் வெளியில் விடுகிறார்கள். மிகவும் மோசடியான நிறுவனங்களாக இருக்கின்றன.
சீமெந்துகைத்தொழிற்சாலைகளும் இவ்வாறுதான் காணப்படுகின்றன. இலங்கைக்கு இறக்குமதி செய்பவர்கள் தான் கைத்தொழிற்சாலையை நடத்துகிறார்கள். அப்போது இருந்த தலைவர்கள் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்கினார்கள்.
இலங்கைக்கு மாத்திரமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் தான் காங்கேசன்துறையில் சீமெந்துக் கைத்தொழிற்சாலையை உருவாக்கினார்கள்.
32 மெகா வாட்ஸ் மின்சார நிலையமொன்றும் இருக்கிறது. அவ்வாறு தான் அதனை உருவாக்கினார்கள். ஆனால் அவற்றை விற்பனை செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டீர்கள்.
அதற்கு சர்வதேச நாணயநிதியத்தை இணைத்துக்கொண்டீர்கள். சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் வேறு வழியில்லாமல் அவற்றை வேறு திட்டங்களுக்கு கொடுக்கின்றோம் என்று கூறினீர்கள்.
ஆனால் அவர்களை நாங்கள் கேட்டால் அவர்கள், நாங்கள் விற்க சொல்லமாட்டோம். உங்களது அரசாங்கம் தான் அதனை விற்பதற்கு முன்மொழிகிறது என்று IMF ஐ சேர்ந்தவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். அதனை வருமானம் பெறும் வழியில் நடத்தி செல்லுமாறு தான் நாங்கள் கூறுகிறோம்.
ஆனால் விற்பனை செய்ய முன்மொழிந்தது நீங்கள் என்று அந்த அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள் என்று தெரிவித்தார்.
IMF கூறியதாக பொய் சொன்ன ரணில் அரசாங்கம்; உண்மையை போட்டுடைத்த அமைச்சர் சுனில் IMF கூறியதால் வேறு வழியின்றி தொழிற்சாலைகளை விற்பனை செய்கின்றோம் என்று முன்னைய அரசாங்கம் பொய் கூறியதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,எனது அமைச்சிலுள்ள நிறுவனங்களை எடுத்துப்பார்த்தால் புல்மோட்டை கனிய மண் நிறுவனம் இருக்கிறது. அங்கு எண்பதாயிரம் மெட்ரிக் தொன் இல்மனைட் இருக்கிறது. அதனை விற்பனை செய்யமுடியாத நிலைமை காணப்படுகிறது. கொடுக்கல் வாங்கல் செய்த வர்த்தகர் ஒருவர் இப்பொழுது அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருக்கிறார். இரண்டு மூன்று பேர் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு அரச நிறுவனங்களுக்கு எதிராக இப்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பரந்தன் இரசாயன தொழிற்சாலை இருக்கிறது. அதன் அலுவலகம் ரத்மலானையில் இருக்கிறது. அதனை பரந்தனுக்கு ஏற்றவாறு நாம் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஒரு சில உதாரணங்களையே நான் கூறியுள்ளேன். வெளிநாடுகளிலிருந்து எவ்வளவு இரசாயனங்களை நாம் கொண்டுவருகிறோம். எவ்வளவு உரத்தை கொண்டுவருகிறோம். பொசுபேற்று, யூரியா போன்றவற்றை நாம் உற்பத்தி செய்யமுடியும். ஆனால் இன்னும் நாம் அதற்கான முயற்சிகளை செய்யவில்லை. அமைச்சரவைப் பத்திரங்களை கொண்டுவந்து சரியான வெளிப்படைத்தன்மை கொண்ட கேள்விப்பத்திரங்களைக் கொண்டுஇந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் வழங்க நங்கள் முயற்சி செய்வோம். இதன் மூலம் எமக்கு சரியான முறையில் உரத்தை உற்பத்தி செய்ய முடியும். எனது அமைச்சின் கீழ் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனம் இருக்கிறது. அதன் கீழ் 50 தொழிற்பேட்டைகள் காணப்படுகின்றன. ஓர் அமைச்சர் தனது பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த நிறுவனத்தை பெற்றுக்கொடுப்பார். அந்த அமைச்சரின் நண்பர் என்ற வகையில் அவர்கள் தாங்கள் நினைத்தபடி உணவை உற்பத்தி செய்வார்கள் அல்லது தளபாடங்களை உற்பத்தி செய்வார்கள். சீனிக்கைத்தொழிற்சாலையை எடுத்துப்பார்த்தால் ஆசியாவுக்கே சீனியை விற்பனை செய்யக்கூடிய ஒரு தொழிற்சாலையை நாம் வைத்திருந்தோம். ஆனால் உங்கள் நண்பர்கள் தான் இதை நடத்தி சென்றார்கள். தங்கள் உற்பத்தி செய்யும் சீனியை கொண்டுசெல்லமல் அதனை தேக்கிவைத்துக்கொண்டிருக்கிறார்கள். செவனகல களஞ்சியத்தில் அந்த சீனியை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்கள் வெளியில் விடுகிறார்கள். மிகவும் மோசடியான நிறுவனங்களாக இருக்கின்றன. சீமெந்துகைத்தொழிற்சாலைகளும் இவ்வாறுதான் காணப்படுகின்றன. இலங்கைக்கு இறக்குமதி செய்பவர்கள் தான் கைத்தொழிற்சாலையை நடத்துகிறார்கள். அப்போது இருந்த தலைவர்கள் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்கினார்கள். இலங்கைக்கு மாத்திரமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் தான் காங்கேசன்துறையில் சீமெந்துக் கைத்தொழிற்சாலையை உருவாக்கினார்கள். 32 மெகா வாட்ஸ் மின்சார நிலையமொன்றும் இருக்கிறது. அவ்வாறு தான் அதனை உருவாக்கினார்கள். ஆனால் அவற்றை விற்பனை செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டீர்கள். அதற்கு சர்வதேச நாணயநிதியத்தை இணைத்துக்கொண்டீர்கள். சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் வேறு வழியில்லாமல் அவற்றை வேறு திட்டங்களுக்கு கொடுக்கின்றோம் என்று கூறினீர்கள். ஆனால் அவர்களை நாங்கள் கேட்டால் அவர்கள், நாங்கள் விற்க சொல்லமாட்டோம். உங்களது அரசாங்கம் தான் அதனை விற்பதற்கு முன்மொழிகிறது என்று IMF ஐ சேர்ந்தவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். அதனை வருமானம் பெறும் வழியில் நடத்தி செல்லுமாறு தான் நாங்கள் கூறுகிறோம். ஆனால் விற்பனை செய்ய முன்மொழிந்தது நீங்கள் என்று அந்த அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள் என்று தெரிவித்தார்.