அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியர்களின் சம்பளம், மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு, விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழில் புரிவதற்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது 'உங்களைப் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் அது சிறப்பானது.' என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவளிப்பதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ரணில் ஆதரவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அரச வைத்தியர்களின் சம்பளம், மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு, விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழில் புரிவதற்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது 'உங்களைப் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் அது சிறப்பானது.' என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவளிப்பதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.