• Sep 21 2024

மொட்டுக் கட்சியின் அனுசரணையோடு ஆட்சிப்பீடமேறிய ரணில் விக்கிரமசிங்கா தற்போது செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றார்- இராதாகிருஸ்ணன் எம். பி! samugammedia

Tamil nila / Jun 17th 2023, 4:59 pm
image

Advertisement

மொட்டுக் கட்சியின் அனுசரணையோடு ஆட்சிப்பீடமேறிய ரணில் விக்கிரமசிங்கா தற்போது செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றார்.  அரசாங்கத்தினுள்ளும் மொட்டுக் கட்சிக்குள்ளும் குழப்பம் நிலவிவரும் நிலையில் நிரந்தரமற்ற அரசாங்கத்திலே ஜனாதிபதியாகவிருந்து  இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்க காரணகர்த்தாவாக இருந்து வருகின்றார்.

இன்று டொலர் மற்றும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மீண்டும் பொருளாதார சிக்கல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை அவதானிக்கக்கூடியவாறுள்ளது.  எனவே நாட்டின் எதிர்காலச் சந்ததியின் நிலை கருதி  ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி  பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்தி  ஸ்திரமான அரசியலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இதேவேளை ஊடக அடக்குமுறை சட்ட மூலத்தைக் கொண்டு வந்து ஊடகங்களில் வெளியிடப்படும் உண்மையான விடயங்களை  மாற்றியமைத்து அதற்கெதிரான பொய்யான கருத்துக்களை  அரசாங்கம் சொல்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை எதிர்பார்த்துள்ளமை புலப்படுகின்றது என்றார்.

மொட்டுக் கட்சியின் அனுசரணையோடு ஆட்சிப்பீடமேறிய ரணில் விக்கிரமசிங்கா தற்போது செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றார்- இராதாகிருஸ்ணன் எம். பி samugammedia மொட்டுக் கட்சியின் அனுசரணையோடு ஆட்சிப்பீடமேறிய ரணில் விக்கிரமசிங்கா தற்போது செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றார்.  அரசாங்கத்தினுள்ளும் மொட்டுக் கட்சிக்குள்ளும் குழப்பம் நிலவிவரும் நிலையில் நிரந்தரமற்ற அரசாங்கத்திலே ஜனாதிபதியாகவிருந்து  இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்க காரணகர்த்தாவாக இருந்து வருகின்றார்.இன்று டொலர் மற்றும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மீண்டும் பொருளாதார சிக்கல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை அவதானிக்கக்கூடியவாறுள்ளது.  எனவே நாட்டின் எதிர்காலச் சந்ததியின் நிலை கருதி  ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி  பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்தி  ஸ்திரமான அரசியலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதேவேளை ஊடக அடக்குமுறை சட்ட மூலத்தைக் கொண்டு வந்து ஊடகங்களில் வெளியிடப்படும் உண்மையான விடயங்களை  மாற்றியமைத்து அதற்கெதிரான பொய்யான கருத்துக்களை  அரசாங்கம் சொல்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை எதிர்பார்த்துள்ளமை புலப்படுகின்றது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement