• Nov 25 2024

ஜனாதிபதி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் ரணில் வெற்றியீட்டுவார்- பியதாச ஆரூடம்

Sharmi / Aug 5th 2024, 3:46 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இந்நாட்டின் உள்ள பெரும்பான்மையான மக்கள் தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச தெரிவித்துள்ளார்.

நல்லதண்ணி மற்றும் நோர்வூட் இலக்கம் 13 பிராந்திய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், இந்த நாட்டின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இன்னும் 05 வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க தயாராகி வருகின்றனர்.

ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்க இந்த மக்களின் துன்பங்களை நீக்கினார் என்பதை இந்நாட்டு மக்கள் அறிவர் என்பதுடன் இந்த நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல கூடியவர் ரணிலால்தான் என்பதை இந்நாட்டு பெரும்பான்மையான மக்கள் அறிவர். 

இன்று சில சமூக ஊடகங்களில் பல்வேறு நபர்கள் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யவுள்ளதாக பலரும் கூறுவதால் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பணியினை தொடர்வார்.

எனவே, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் ரணில் வெற்றியீட்டுவார்- பியதாச ஆரூடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இந்நாட்டின் உள்ள பெரும்பான்மையான மக்கள் தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச தெரிவித்துள்ளார்.நல்லதண்ணி மற்றும் நோர்வூட் இலக்கம் 13 பிராந்திய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், இந்த நாட்டின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இன்னும் 05 வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க தயாராகி வருகின்றனர்.ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்க இந்த மக்களின் துன்பங்களை நீக்கினார் என்பதை இந்நாட்டு மக்கள் அறிவர் என்பதுடன் இந்த நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல கூடியவர் ரணிலால்தான் என்பதை இந்நாட்டு பெரும்பான்மையான மக்கள் அறிவர். இன்று சில சமூக ஊடகங்களில் பல்வேறு நபர்கள் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யவுள்ளதாக பலரும் கூறுவதால் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பணியினை தொடர்வார்.எனவே, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement