• Sep 20 2024

ரணிலை அரசியலில் இருந்து ஒதுக்கியதே நாட்டின் இந்த வீழ்ச்சிக்கு காரணமாம்! SamugamMedia

Chithra / Feb 16th 2023, 2:12 pm
image

Advertisement

கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தை மாற்ற வேண்டாம் என்றும், அவ்வாறு மாற்றினால் நாடு காரிய வீழ்ச்சியை சந்திக்குமென கடந்த தேர்தல் காலத்தில் 

குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்பியிருந்ததாக ஜக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திறைசேரியில் 3 பில்லியன் டொலர் கையிருப்புடனேயே அன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கையளித்திருந்தார்.

இன்று இந்தியா உலகில் பாரிய வளர்ச்சியடைந்துள்ள நாடாகியுள்ளது. இந்தியாவிடம் 400 பில்லியன் டொலர் நிலையான கையிருப்பு காணப்படுகிறது. உலகில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆனால் இலங்கை மக்கள் என்ன செய்தனர்? 

3 பில்லியன் டொலர் இருப்பை பேணிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலிலிருந்து ஒதுக்கினர்.


அவர் ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாம் இது தொடர்பில் அவரிடம் வினவிய போது, நாம் சென்ற பாதையை மாற்றினால் 2023இல் மீண்டும் எமக்கு நாட்டை கட்டியெழுப்ப வேண்டியேற்படும் என்று குறிப்பிட்டார். 

எனினும் 2022 இலேயே அந்த பொறுப்பினை ஏற்க வேண்டியேற்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் அறிவுடன் சிந்தித்து எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கினால் ஆசியாவிலும், உலகிலும் பலம் மிக்க நாடாக நாட்டை உயர்த்துவார்.

இலங்கையை முட்டாள்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று சர்வதேசம் எண்ணக்கூடும். இலங்கை ஆசியாவில் வளர்ச்சியடைந்த நாடாகிவிடக் கூடும் என்பதே இவ்வாறான எண்ணத்திற்கான காரணமாகும். 

எனவே தான் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை சர்வதேசம் கூட சில சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ரணிலை அரசியலில் இருந்து ஒதுக்கியதே நாட்டின் இந்த வீழ்ச்சிக்கு காரணமாம் SamugamMedia கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தை மாற்ற வேண்டாம் என்றும், அவ்வாறு மாற்றினால் நாடு காரிய வீழ்ச்சியை சந்திக்குமென கடந்த தேர்தல் காலத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்பியிருந்ததாக ஜக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.அவ்வாறு 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திறைசேரியில் 3 பில்லியன் டொலர் கையிருப்புடனேயே அன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கையளித்திருந்தார்.இன்று இந்தியா உலகில் பாரிய வளர்ச்சியடைந்துள்ள நாடாகியுள்ளது. இந்தியாவிடம் 400 பில்லியன் டொலர் நிலையான கையிருப்பு காணப்படுகிறது. உலகில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.ஆனால் இலங்கை மக்கள் என்ன செய்தனர் 3 பில்லியன் டொலர் இருப்பை பேணிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலிலிருந்து ஒதுக்கினர்.அவர் ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாம் இது தொடர்பில் அவரிடம் வினவிய போது, நாம் சென்ற பாதையை மாற்றினால் 2023இல் மீண்டும் எமக்கு நாட்டை கட்டியெழுப்ப வேண்டியேற்படும் என்று குறிப்பிட்டார். எனினும் 2022 இலேயே அந்த பொறுப்பினை ஏற்க வேண்டியேற்பட்டுள்ளது.இலங்கை மக்கள் அறிவுடன் சிந்தித்து எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கினால் ஆசியாவிலும், உலகிலும் பலம் மிக்க நாடாக நாட்டை உயர்த்துவார்.இலங்கையை முட்டாள்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று சர்வதேசம் எண்ணக்கூடும். இலங்கை ஆசியாவில் வளர்ச்சியடைந்த நாடாகிவிடக் கூடும் என்பதே இவ்வாறான எண்ணத்திற்கான காரணமாகும். எனவே தான் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை சர்வதேசம் கூட சில சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement