• May 03 2024

முல்லை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பூச பொங்கல் விழா!SamugamMedia

Sharmi / Feb 16th 2023, 2:22 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி கடந்த 07.02.2023 செவ்வாய் கிழமை காலை 8.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மாவட்ட செயலக முன்றலில் அலுவலக ஊழியர்களால் கோலமிடப்பட்டு, கும்பம் வைக்கப்பட்டு கரும்பு, மாவிலை, தோரணங்கள், வாழைகள் என்பன கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மாவட்ட செயலக முன்றலிலிருந்து மாட்டுவண்டியில் சென்று தைப்பூச நன்நாளில் முன்னெடுக்கப்படும் மரபுவழிப் பண்பாடான புதிர் எடுத்துவரப்பட்டதைத் தொடர்ந்து அதனை பாரம்பரிய முறைப்படி உரலிலிட்டு அரிசியாக்கி பின் பொங்கல் பானை வைக்கப்பட்டு புத்தரிசியால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த பொங்கல் விழாவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


முல்லை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பூச பொங்கல் விழாSamugamMedia முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி கடந்த 07.02.2023 செவ்வாய் கிழமை காலை 8.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.இதன்போது மாவட்ட செயலக முன்றலில் அலுவலக ஊழியர்களால் கோலமிடப்பட்டு, கும்பம் வைக்கப்பட்டு கரும்பு, மாவிலை, தோரணங்கள், வாழைகள் என்பன கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து மாவட்ட செயலக முன்றலிலிருந்து மாட்டுவண்டியில் சென்று தைப்பூச நன்நாளில் முன்னெடுக்கப்படும் மரபுவழிப் பண்பாடான புதிர் எடுத்துவரப்பட்டதைத் தொடர்ந்து அதனை பாரம்பரிய முறைப்படி உரலிலிட்டு அரிசியாக்கி பின் பொங்கல் பானை வைக்கப்பட்டு புத்தரிசியால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.குறித்த பொங்கல் விழாவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement