• Sep 19 2024

விஜய் பட வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல நடிகை..! ஆனால் அஜித்துக்கு ஓகே சொல்லிட்டாரே..?

Aathira / May 3rd 2024, 10:30 am
image

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌதரி நடிக்கின்றார்.

இது தவிர பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், அஜ்மல், நிதின் சத்யா, வைபப், பிரேம்ஜி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யு வன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த நிலையில், விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் குத்தாடம் போடுவதற்கு ஒரு நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கோட் படத்தில் ஐட்டம் சாங் ஒன்று இடம் பெறுவதாகவும்  அதில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாட தெலுங்கில் டாப் ஹீரோயினாக காணப்படும் ஸ்ரீ லீலாவை படக்குழு அணுகி இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.


ஆனால் அந்த வாய்ப்பை நடிகை ஸ்ரீ லீலா நிராகரித்துள்ளாராம். விஜயுடன் நடனம் ஆடுவதற்கு பல்வேறு நடிகைகள் ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்துள்ளார் ஸ்ரீ லீலா.

அதற்கு காரணம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக விரும்புகின்றார். அதனால் இப்போதைக்கு ஐட்டம் சாங் ஒன்றிற்கும் டான்ஸ் ஆட முடியாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, அஜித் நடிக்கும் குட்பேட்அக்லி படத்தில் நடிப்பதற்கு ஹீரோயினாக என்ட்ரி ஆகியுள்ளார் ஸ்ரீலீலா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விஜய் பட வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல நடிகை. ஆனால் அஜித்துக்கு ஓகே சொல்லிட்டாரே. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌதரி நடிக்கின்றார்.இது தவிர பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், அஜ்மல், நிதின் சத்யா, வைபப், பிரேம்ஜி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யு வன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.இந்த நிலையில், விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் குத்தாடம் போடுவதற்கு ஒரு நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.அதாவது கோட் படத்தில் ஐட்டம் சாங் ஒன்று இடம் பெறுவதாகவும்  அதில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாட தெலுங்கில் டாப் ஹீரோயினாக காணப்படும் ஸ்ரீ லீலாவை படக்குழு அணுகி இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.ஆனால் அந்த வாய்ப்பை நடிகை ஸ்ரீ லீலா நிராகரித்துள்ளாராம். விஜயுடன் நடனம் ஆடுவதற்கு பல்வேறு நடிகைகள் ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்துள்ளார் ஸ்ரீ லீலா.அதற்கு காரணம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக விரும்புகின்றார். அதனால் இப்போதைக்கு ஐட்டம் சாங் ஒன்றிற்கும் டான்ஸ் ஆட முடியாது என்று கூறியுள்ளார்.இதேவேளை, அஜித் நடிக்கும் குட்பேட்அக்லி படத்தில் நடிப்பதற்கு ஹீரோயினாக என்ட்ரி ஆகியுள்ளார் ஸ்ரீலீலா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement