ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்னும் 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்த நிலையில், அதில் பல கட்சிகள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கோரியுள்ளதன் காரணமாக தற்போது பிரதிநிதிகள் நியமனம் தொடர்பில் நெருக்கடிகளை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஜித் தரப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் தெரிவு. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்னும் 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.இம்முறை பொதுத் தேர்தலில் பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்த நிலையில், அதில் பல கட்சிகள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கோரியுள்ளதன் காரணமாக தற்போது பிரதிநிதிகள் நியமனம் தொடர்பில் நெருக்கடிகளை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.