• Nov 28 2024

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளி - ஆச்சரியத்தில் மக்கள்

Chithra / Jun 18th 2024, 9:33 am
image

 பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

63 வயதான   சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகியுள்ளது.

அவர் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். 

மேலும் பயிர்கள் அவர்களின் தேவைக்கு எடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை விற்று பொருளாதார நன்மைகளை பெற்று வருகிறார்.

தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில், நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு துளிர்விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர், 

அதை எடைபோட்டபோது ​​​​44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது.

இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளி - ஆச்சரியத்தில் மக்கள்  பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.63 வயதான   சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகியுள்ளது.அவர் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். மேலும் பயிர்கள் அவர்களின் தேவைக்கு எடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை விற்று பொருளாதார நன்மைகளை பெற்று வருகிறார்.தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில், நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு துளிர்விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர், அதை எடைபோட்டபோது ​​​​44 கிலோ கிராம் இருந்தாக தெரியவந்துள்ளது.இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement