மிகவும் அரிதான மீன் இனத்தைச் சேர்ந்த 'பெத்தியா மீன்' மீன் இனமானது தங்களது வாழ்விடங்களை இழந்து வருவதாக இலங்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கேகாலை - கலபிட்டமட பகுதியில் காணக்கூடிய மிகவும் அரிதான 'பெத்தியா மீன்' இனம் தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இந்த அரிய வகை மீன் இனமானது உலகில் சில பகுதிகளிலேயே வசிக்கின்றன.
“பெத்தியா மீன்” வாழக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக இவை அழிந்து வருகின்றன.
கலபிட்டமட பகுதியில் கடந்த ஆண்டுகளாக பல்வேறு கட்டுமான பணிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பிரதேச செயலாளர் ரன்கம சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மனிதர்களால் அழிந்துவரும் அரியவகை 'பெத்தியா மீன்' இனம் மிகவும் அரிதான மீன் இனத்தைச் சேர்ந்த 'பெத்தியா மீன்' மீன் இனமானது தங்களது வாழ்விடங்களை இழந்து வருவதாக இலங்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கேகாலை - கலபிட்டமட பகுதியில் காணக்கூடிய மிகவும் அரிதான 'பெத்தியா மீன்' இனம் தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.இந்த அரிய வகை மீன் இனமானது உலகில் சில பகுதிகளிலேயே வசிக்கின்றன.“பெத்தியா மீன்” வாழக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக இவை அழிந்து வருகின்றன. கலபிட்டமட பகுதியில் கடந்த ஆண்டுகளாக பல்வேறு கட்டுமான பணிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பிரதேச செயலாளர் ரன்கம சஞ்சீவ தெரிவித்துள்ளார்.