13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன்,
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும்.
இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும்.
13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா்.
வாக்குகளுக்காக வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு 13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவர் இதனைக் குறிப்பிட்டார். சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும்.இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும்.13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா்.