• Mar 06 2025

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல்நிலமைகள் குறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

Tharmini / Jan 29th 2025, 2:53 pm
image

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல் நிலமைகள் குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (29) நேரில்சென்று ஆராய்ந்துள்ளார்.

குறிப்பாக பூதன்வயல் பகுதியில் இடப்பெயர்விற்கு முன்னர் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக அபகரித்து வைத்திருக்கும்நிலையில் குறித்த பாடசாலை பூதன்வயல் கிராமஅபிவிருத்திச்சங்கத்திற்குரிய பொதுநோக்கு மண்டபத்தில் இயங்கிவருகின்றது.

இந் நிலையில் காணியை மீட்டெடுப்பதற்கு அப்பகுதிமக்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒருகட்டமாக பாடசாலைக்காணியினை விடுவிப்பதுதொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்றும் இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறான சூழலில் பாடசாலைக்கென காணிஒன்றில்லாத நிலையில், பாடசாலை அபிவிருத்திக்கென ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளும் திரும்பிச்செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இதனால் குறித்த பாடசாலையானது பாரிய வளப்பற்றாக்குறைகளுடன் காணப்படுவதுடன், கல்விகற்கும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்களும் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் கடந்த நேற்றுமுன்தினம் ( 27)  பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை அமைந்துள்ள காணிக்கு அருகாமையில் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள் மற்றும், பாடசாலை சமூகத்தினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலக மேலதிக பிரதேசசெயலர் மற்றும், காணிஉத்தியோகத்தர், அப்பகுதி கிராம அலுவலர், பொலிசார் உள்ளிட்ட தரப்பினர் பாடசாலைக்காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், பாடசாலையில் தற்போது நிலவும் அடிப்படைக் குறைபாடுகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்ததைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்தவிடயங்கள்தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு பூதன்வயல் கிராமமக்கள் முறையிட்டதையடுத்து இன்று  குறித்த பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாகச்சென்று பாடசாலையில் நிலவும் சிக்கல் நிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன், பாடசாலை ஆசிரியர்கள், கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிகளுடனும் கலந்துரையாடியிருந்தார். அத்தோடு இடப்பெயர்விற்கு முன்னர் பாடசாலை இயங்கிய குறித்த காணியினையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டுமிருந்தார்.





மேலும் பூதன்வயல் கிராமத்தில் இயங்கும் குறித்த பாடசாலையின் பிரச்சினைகள் தொடர்பில் அப்பகுதிமக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


இந்நிலையில் குறித்த பாடசாலையின் சிக்கல் நிலமைகளைத் தீர்ப்பது தொடர்பில் தாம் கவனஞ்செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


பூதன்வயல் பாடசாலையின் சிக்கல்நிலமைகள் குறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல் நிலமைகள் குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (29) நேரில்சென்று ஆராய்ந்துள்ளார்.குறிப்பாக பூதன்வயல் பகுதியில் இடப்பெயர்விற்கு முன்னர் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக அபகரித்து வைத்திருக்கும்நிலையில் குறித்த பாடசாலை பூதன்வயல் கிராமஅபிவிருத்திச்சங்கத்திற்குரிய பொதுநோக்கு மண்டபத்தில் இயங்கிவருகின்றது.இந் நிலையில் காணியை மீட்டெடுப்பதற்கு அப்பகுதிமக்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒருகட்டமாக பாடசாலைக்காணியினை விடுவிப்பதுதொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்றும் இடம்பெற்றுவருகின்றது.இவ்வாறான சூழலில் பாடசாலைக்கென காணிஒன்றில்லாத நிலையில், பாடசாலை அபிவிருத்திக்கென ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளும் திரும்பிச்செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இதனால் குறித்த பாடசாலையானது பாரிய வளப்பற்றாக்குறைகளுடன் காணப்படுவதுடன், கல்விகற்கும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்களும் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இத்தகைய சூழலில் கடந்த நேற்றுமுன்தினம் ( 27)  பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை அமைந்துள்ள காணிக்கு அருகாமையில் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள் மற்றும், பாடசாலை சமூகத்தினர் ஈடுபட்டனர்.இந்நிலையில் குறித்த போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலக மேலதிக பிரதேசசெயலர் மற்றும், காணிஉத்தியோகத்தர், அப்பகுதி கிராம அலுவலர், பொலிசார் உள்ளிட்ட தரப்பினர் பாடசாலைக்காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், பாடசாலையில் தற்போது நிலவும் அடிப்படைக் குறைபாடுகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்ததைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.இந் நிலையில் இந்தவிடயங்கள்தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு பூதன்வயல் கிராமமக்கள் முறையிட்டதையடுத்து இன்று  குறித்த பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாகச்சென்று பாடசாலையில் நிலவும் சிக்கல் நிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன், பாடசாலை ஆசிரியர்கள், கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிகளுடனும் கலந்துரையாடியிருந்தார். அத்தோடு இடப்பெயர்விற்கு முன்னர் பாடசாலை இயங்கிய குறித்த காணியினையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டுமிருந்தார்.மேலும் பூதன்வயல் கிராமத்தில் இயங்கும் குறித்த பாடசாலையின் பிரச்சினைகள் தொடர்பில் அப்பகுதிமக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த பாடசாலையின் சிக்கல் நிலமைகளைத் தீர்ப்பது தொடர்பில் தாம் கவனஞ்செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now