• Apr 20 2025

ஒட்டுசுட்டானுக்கு விஜயம் செய்த ரவிகரன் எம்.பி: நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு..!

Sharmi / Apr 19th 2025, 2:43 pm
image

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம், மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடைபோர்த்தி, மாலை அணிவித்து வரவேற்பளித்திருந்தார்.

எதிர்வரும் சித்திராபௌர்ணமிக்கு குறித்த ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்திற்குச் செல்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள வீதியை தற்காலிகமாகச் சீரமைப்புச் செய்துதருமாறு கோவில் நிர்வாகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்திருந்தனர். அதற்கமைய குறித்த கோவிலுக்குச் செல்வதற்கான வீதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த கோவிலுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் வீதியை நிரந்தரமாகச் சீரமைப்பதற்கு எழுத்து மூலமான கோரிக்கையை தம்மிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன், குறித்தவீதியை நிரந்தரமாகச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.





ஒட்டுசுட்டானுக்கு விஜயம் செய்த ரவிகரன் எம்.பி: நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம், மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  வழிபாடுகளை மேற்கொண்டார்.இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடைபோர்த்தி, மாலை அணிவித்து வரவேற்பளித்திருந்தார்.எதிர்வரும் சித்திராபௌர்ணமிக்கு குறித்த ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்திற்குச் செல்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள வீதியை தற்காலிகமாகச் சீரமைப்புச் செய்துதருமாறு கோவில் நிர்வாகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்திருந்தனர். அதற்கமைய குறித்த கோவிலுக்குச் செல்வதற்கான வீதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த கோவிலுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் வீதியை நிரந்தரமாகச் சீரமைப்பதற்கு எழுத்து மூலமான கோரிக்கையை தம்மிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன், குறித்தவீதியை நிரந்தரமாகச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement