சம்மாந்துறை கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீள இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இச்சிறுவர் பூங்கா அருகில் உள்ள கைகாட்டி குளத்தில் முதலைகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமையை தொடர்ந்து,
சிறுவர்களின் பாதுகாப்பு நலனைக் கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீள திறந்து சிறுவர்களின் பாவனைக்கு கையளிப்பதற்காக, சிறுவர் பூங்கா வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் குளத்தை அன்றிய பிரதேசத்தில் முதலைகள் உட்செல்லாதவாறு வலைகள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் வியாழக்கிழமை (13) பிரதேச சபையின் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் இச் சிறுவர் பூங்கா இன்று முதல் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீளத்திறப்பு சம்மாந்துறை கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீள இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.கடந்த காலங்களில் இச்சிறுவர் பூங்கா அருகில் உள்ள கைகாட்டி குளத்தில் முதலைகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமையை தொடர்ந்து,சிறுவர்களின் பாதுகாப்பு நலனைக் கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீள திறந்து சிறுவர்களின் பாவனைக்கு கையளிப்பதற்காக, சிறுவர் பூங்கா வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் குளத்தை அன்றிய பிரதேசத்தில் முதலைகள் உட்செல்லாதவாறு வலைகள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் வியாழக்கிழமை (13) பிரதேச சபையின் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் இச் சிறுவர் பூங்கா இன்று முதல் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.