• Sep 20 2024

எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார்..! நீதியமைச்சர் விஜயதாச அறிவிப்பு

Chithra / Jun 9th 2024, 8:49 am
image

Advertisement

 

எந்தவொரு அரசியல் கட்சி தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்   குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவித்தல் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும்,

ஒழுக்காற்று சபையின் அறிக்கை தற்பொது கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.  

அத்தோடு, விஜயதாச ராஜபக்ச இவ்வாறான செயற்பாடுகள் கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை சுட்டிக்காட்டியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார். நீதியமைச்சர் விஜயதாச அறிவிப்பு  எந்தவொரு அரசியல் கட்சி தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்   குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பான அறிவித்தல் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும்,ஒழுக்காற்று சபையின் அறிக்கை தற்பொது கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.  அத்தோடு, விஜயதாச ராஜபக்ச இவ்வாறான செயற்பாடுகள் கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை சுட்டிக்காட்டியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement