உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயலாகும்.
தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்கின்றோம்.
இது முற்றுமுழுதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் என்று கூறப்படுகிறது. அவ்வாறிருக்கையில் எதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர்?
நான் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. ஆனால் நாம் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. காரணம் நாம் நியாயமான விமர்சனங்களையே முன்வைத்திருக்கின்றோம்.
ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதாகக் கூறிய அரசாங்கம் 323 கொள்கலன்களை பரிசோதனைகள் இன்றி விடுவித்துள்ளது.
எனவே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது வீதிக்கு இறங்க தயாரா - கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.கொழும்பில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயலாகும். தற்போது நீங்கள் வீதிக்கு இறங்க தயாரா என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்கின்றோம். இது முற்றுமுழுதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் என்று கூறப்படுகிறது. அவ்வாறிருக்கையில் எதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர்நான் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. ஆனால் நாம் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. காரணம் நாம் நியாயமான விமர்சனங்களையே முன்வைத்திருக்கின்றோம். ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதாகக் கூறிய அரசாங்கம் 323 கொள்கலன்களை பரிசோதனைகள் இன்றி விடுவித்துள்ளது. எனவே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.