• Dec 17 2025

கம்பளையில் மண்ணுக்குள் புதைந்த எட்டு பேரின் உடல்கள் மீட்பு

Chithra / Dec 14th 2025, 9:12 am
image

கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் நேற்றையதினம் கடைசி உடல் மீட்கப்பட்டுள்ளது.


இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் குருந்துவத்த - வெலிகந்த பகுதியில்  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக பல வீடுகள் மண் மேட்டுக்குள் புதைந்தன.


பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் 15 நாட்கள் இரவு பகல் பாராது மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க பெரும் முயற்சியை எடுத்துள்ளனர். 


அதன்படி இந்த மண் மேட்டின் கீழ் புதைந்த எட்டு பேரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை இறுதியாக பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் தற்போதைய காட்சிகள் வெளியாகியுள்ளன. 


கம்பளையில் மண்ணுக்குள் புதைந்த எட்டு பேரின் உடல்கள் மீட்பு கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் நேற்றையதினம் கடைசி உடல் மீட்கப்பட்டுள்ளது.இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் குருந்துவத்த - வெலிகந்த பகுதியில்  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக பல வீடுகள் மண் மேட்டுக்குள் புதைந்தன.பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் 15 நாட்கள் இரவு பகல் பாராது மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க பெரும் முயற்சியை எடுத்துள்ளனர். அதன்படி இந்த மண் மேட்டின் கீழ் புதைந்த எட்டு பேரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை இறுதியாக பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் தற்போதைய காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement