இலங்கையில் ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் கடந்த சில தினங்களில் இவ்வாறு ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சுமார் ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அசாதாரணமான முறையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை மூலம் தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
நீர்மின் உற்பத்தி மூலம் பாரிய அளவு லாபத்தை இலங்கை மின்சார சபை ஈட்டுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. மின் கட்டண அதிகரிப்புக்கு சஜித் எதிர்ப்பு. samugammedia இலங்கையில் ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் கடந்த சில தினங்களில் இவ்வாறு ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், சுமார் ஐந்து இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.அசாதாரணமான முறையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை மூலம் தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.நீர்மின் உற்பத்தி மூலம் பாரிய அளவு லாபத்தை இலங்கை மின்சார சபை ஈட்டுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.