• Sep 20 2024

குறைக்கப்பட்டது நீர் கட்டணம் - வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Chithra / Aug 23rd 2024, 8:12 am
image

Advertisement

 

ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியானது. 

இதன்படி, மொத்த நீர் கட்டணத்தை 5.94 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7%, அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5%, பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 6.3 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு பிரிவில் 0 முதல் 05 அலகுகளுக்கான கட்டணம்   10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

76 முதல் 100 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகுக்கு அறவிடப்படும் கட்டணம்  20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது..

அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் 60 ரூபாவாக இருந்த கட்டணம்  5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய கட்டணம் 55 ரூபாவாகும்,.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்கு 100 ரூபாவாக இருந்த ஒரு அலகு நீர் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய கட்டணம் 95 ரூபாவாகும்.

எனினும், இந்த குடிநீர் கட்டண திருத்தத்தின் கீழ் மாதாந்திர சேவைக் கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

குறைக்கப்பட்டது நீர் கட்டணம் - வெளியான வர்த்தமானி அறிவித்தல்  ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியானது. இதன்படி, மொத்த நீர் கட்டணத்தை 5.94 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7%, அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5%, பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 6.3 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வீட்டு பிரிவில் 0 முதல் 05 அலகுகளுக்கான கட்டணம்   10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.76 முதல் 100 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகுக்கு அறவிடப்படும் கட்டணம்  20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் 60 ரூபாவாக இருந்த கட்டணம்  5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய கட்டணம் 55 ரூபாவாகும்,.இதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்கு 100 ரூபாவாக இருந்த ஒரு அலகு நீர் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய கட்டணம் 95 ரூபாவாகும்.எனினும், இந்த குடிநீர் கட்டண திருத்தத்தின் கீழ் மாதாந்திர சேவைக் கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement