மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மின் கட்டணம் குறைக்கப்பட்டதால் தற்போது 30 அலகு பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 ரூபாயிலிருந்து 390 ரூபாவாக குறைந்துள்ளது.
60 அலகுகளை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை 1,620 ரூபாயிலிருந்து 1,140 ரூபாயாக குறைந்துள்ளது.
90 அலகுகளை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை 3,990 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
120 அலகுகளை பயன்படுத்தியவருக்கு கட்டணம் 6,460 ரூபாயில் இருந்து 4,900 ரூபாயாக குறையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணம் குறைப்பு. மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.மின் கட்டணம் குறைக்கப்பட்டதால் தற்போது 30 அலகு பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 ரூபாயிலிருந்து 390 ரூபாவாக குறைந்துள்ளது.60 அலகுகளை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை 1,620 ரூபாயிலிருந்து 1,140 ரூபாயாக குறைந்துள்ளது.90 அலகுகளை பயன்படுத்தும் ஒருவர் செலுத்த வேண்டிய தொகை 3,990 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.120 அலகுகளை பயன்படுத்தியவருக்கு கட்டணம் 6,460 ரூபாயில் இருந்து 4,900 ரூபாயாக குறையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.