இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.
இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பிரபாகரனின் பிறந்ததின வாழ்த்து பதிவு தொடர்பாக : ரி.ஐ.டியினர் ஒருவரிடம் விசாரணை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.