• Dec 23 2024

மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு- மொரட்டுவையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil nila / Dec 22nd 2024, 8:16 pm
image

மொரட்டுவை, இந்திபெத்த பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்று மதியம் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பின்னர்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பெண், பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கு முன்னர் அவர், அயல் வீட்டில் இருந்த நபரொருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறிது காலமாக நிலவி வந்த தகராறே இந்த தாக்குதலுக்கு காரணமென பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு- மொரட்டுவையில் அதிர்ச்சி சம்பவம் மொரட்டுவை, இந்திபெத்த பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் நேற்று மதியம் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பின்னர்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்த பெண், பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்திற்கு முன்னர் அவர், அயல் வீட்டில் இருந்த நபரொருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.தாக்குதலில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறிது காலமாக நிலவி வந்த தகராறே இந்த தாக்குதலுக்கு காரணமென பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement