எழுத்தாளர் நேத்ரபாரதி எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான நேத்ரபாரதி எழுதிய புலம்பேசும் மண்வாசம், கற்றுத்தரும் வானம், மகவைத்தேடி எனும் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் கவிஞர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் கவிஞர் யோ.புரட்சி நிகழ்வினை தொகுத்து வழங்க மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நூல்வெளியீட்டு விழாவில் மூன்று நூல்களான "புலம்பேசும் மண்வாசம்" (கவிதை) எனும் நூலிற்கான நயவுரையை கவிஞர் வே.முல்லைதீபனும் "கற்றுத்தரும் வானம் " (சிறுவர் பாடல்) எனும் நூலிற்கான நயவுரையை வன்னிமகள் கவிதாஜினியும், "மகவைத்தேடி" (சிறுகதை) எனும் நூலிற்கான நயவுரையை உடுவிலூர்க்கலா எழுத்தாளரும் வழங்கியிருந்தனர்.
இறுதியில் நூலாசிரியருக்கான கௌரவமும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கான கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளியின் பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக காங்கேசன்துறை சாரண பயிற்றுநர், சரோஜினிதேவி கனகரத்தினம், கௌரவ விருந்தினராக ஈழதமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் அன்பரசன் மற்றும் வணங்காமண் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் ஜீவரத்தினம், அதன் செயலாளர் இரா .சதீஸ், விஜய் பதிப்பக உரிமையாளர் எஸ்.விஜய், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் , சுழிபுரம் அறநெறி பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ். பொது நூலகத்தில் நேத்ரபாரதியின் மூன்று நூல்கள் வெளியீடு விழா எழுத்தாளர் நேத்ரபாரதி எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான நேத்ரபாரதி எழுதிய புலம்பேசும் மண்வாசம், கற்றுத்தரும் வானம், மகவைத்தேடி எனும் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சிறப்புற இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் கவிஞர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் கவிஞர் யோ.புரட்சி நிகழ்வினை தொகுத்து வழங்க மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நூல்வெளியீட்டு விழாவில் மூன்று நூல்களான "புலம்பேசும் மண்வாசம்" (கவிதை) எனும் நூலிற்கான நயவுரையை கவிஞர் வே.முல்லைதீபனும் "கற்றுத்தரும் வானம் " (சிறுவர் பாடல்) எனும் நூலிற்கான நயவுரையை வன்னிமகள் கவிதாஜினியும், "மகவைத்தேடி" (சிறுகதை) எனும் நூலிற்கான நயவுரையை உடுவிலூர்க்கலா எழுத்தாளரும் வழங்கியிருந்தனர்.இறுதியில் நூலாசிரியருக்கான கௌரவமும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கான கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.நிகழ்வில் பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளியின் பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக காங்கேசன்துறை சாரண பயிற்றுநர், சரோஜினிதேவி கனகரத்தினம், கௌரவ விருந்தினராக ஈழதமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் அன்பரசன் மற்றும் வணங்காமண் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் ஜீவரத்தினம், அதன் செயலாளர் இரா .சதீஸ், விஜய் பதிப்பக உரிமையாளர் எஸ்.விஜய், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் , சுழிபுரம் அறநெறி பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.