• Nov 22 2024

பொதுத் தேர்தல் தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்; 18 பேர் கைது! 439 முறைப்பாடுகள் பதிவு

Chithra / Oct 22nd 2024, 10:49 am
image


 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 427 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 162 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 277 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொதுத் தேர்தல் தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்; 18 பேர் கைது 439 முறைப்பாடுகள் பதிவு  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 427 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 162 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 277 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement