கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
குறித்த வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை. ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக நான் அரசியலில் ஈடுபடவில்லை.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், உண்மையைக் கண்டறிந்த பிறகே பேச வேண்டும்.
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுவில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி, அனிவத்தையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் BMW மற்றும் சொகுசு SUV வாகனங்களை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினர் அண்மையில் கண்டுபிடித்தனர்.
இந்த வாகனம் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அவர் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் இந்த அறிக்கை வந்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் – முன்னாள் அமைச்சர் ரோஹித அறிவிப்பு கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,குறித்த வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை. ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக நான் அரசியலில் ஈடுபடவில்லை.இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், உண்மையைக் கண்டறிந்த பிறகே பேச வேண்டும்.எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுவில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கண்டி, அனிவத்தையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் BMW மற்றும் சொகுசு SUV வாகனங்களை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினர் அண்மையில் கண்டுபிடித்தனர்.இந்த வாகனம் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அவர் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் இந்த அறிக்கை வந்துள்ளது.