• Nov 26 2024

காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல்சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..!

Chithra / Dec 17th 2023, 7:44 am
image

 

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள சைவ பரிபாலன சபை, இந்து சமயப் பேரவை, கொடிகாமம் சிவத்தொண்டர் பேரவை ஆகியவற்றின் நிர்வாகிகளால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் சிதம்பரத்திலுள்ள நடராஜர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், சிதம்பரத்தில் நடைபெறும் உற்சவத்தில் பங்கேற்பதற்கு, இலங்கையிலுள்ள பக்தர்களுக்கு விசேட கப்பல் மூலம் குறைந்த செலவில் இந்தியாவுக்கு சென்றுவர அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் திருவிழாவுக்காக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு விசேட கப்பல் சேவையை இயக்குவதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.

எனினும், அதற்கான பயண ஏற்பாடுகள் இரண்டு தரப்பினராலும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே, சிதம்பரம் திருவிழாவில் பங்கேற்பதற்கு, இலங்கை பக்தர்களின் வசதிக்காக காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் வலிறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், வட - கிழக்குப் பருவபெயர்ச்சி மழை மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கப் பணி ஆகியவை காரணமாக ஒக்டோபர் 20ஆம் திகதியுடன் குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல்சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.  காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள சைவ பரிபாலன சபை, இந்து சமயப் பேரவை, கொடிகாமம் சிவத்தொண்டர் பேரவை ஆகியவற்றின் நிர்வாகிகளால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தின் சிதம்பரத்திலுள்ள நடராஜர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.இந்தநிலையில், சிதம்பரத்தில் நடைபெறும் உற்சவத்தில் பங்கேற்பதற்கு, இலங்கையிலுள்ள பக்தர்களுக்கு விசேட கப்பல் மூலம் குறைந்த செலவில் இந்தியாவுக்கு சென்றுவர அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் திருவிழாவுக்காக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு விசேட கப்பல் சேவையை இயக்குவதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.எனினும், அதற்கான பயண ஏற்பாடுகள் இரண்டு தரப்பினராலும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.எனவே, சிதம்பரம் திருவிழாவில் பங்கேற்பதற்கு, இலங்கை பக்தர்களின் வசதிக்காக காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் வலிறுத்தியுள்ளனர்.எவ்வாறாயினும், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.எனினும், வட - கிழக்குப் பருவபெயர்ச்சி மழை மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கப் பணி ஆகியவை காரணமாக ஒக்டோபர் 20ஆம் திகதியுடன் குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement