• Oct 12 2024

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை

Anaath / Oct 11th 2024, 10:59 am
image

Advertisement

மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார். பிரதம மந்திரி அலுவலக தொடர்பின் அடிப்படையில் பிரதமர் அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியைக் கோரியமைக்கமைய, மீட்புப் பணிகளுக்கு மியான்மர் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) உதவ முன்வந்துள்ளது.

தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்னுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.சைபர் கிரைம் முகாம்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்பதில் தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இலங்கையர்களை மீட்க தொடர்ந்து ஆதரவை கோரினார்.

பிரதமரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த தூதுவர் பைட்டூன் மஹாபண்னபோர்ன், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், சுற்றுலாத் துறையின் மேம்பாடு, நவீன விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் உணவு தொடர்பான கூட்டு ஆய்வுகள் குறித்துப் கலந்துரையாடியுள்ளார்.

பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, தாய்லாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் பிராங்திப் கோங்கிரிதிசுக்சகோர்ன் மற்றும் தோம் பெட்ச்புக்டெபோங் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசிய பிரிவின் பணிப்பாளர் திலினி ஹலகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார். பிரதம மந்திரி அலுவலக தொடர்பின் அடிப்படையில் பிரதமர் அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியைக் கோரியமைக்கமைய, மீட்புப் பணிகளுக்கு மியான்மர் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) உதவ முன்வந்துள்ளது.தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்னுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.சைபர் கிரைம் முகாம்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்பதில் தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இலங்கையர்களை மீட்க தொடர்ந்து ஆதரவை கோரினார்.பிரதமரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த தூதுவர் பைட்டூன் மஹாபண்னபோர்ன், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், சுற்றுலாத் துறையின் மேம்பாடு, நவீன விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் உணவு தொடர்பான கூட்டு ஆய்வுகள் குறித்துப் கலந்துரையாடியுள்ளார்.பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, தாய்லாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் பிராங்திப் கோங்கிரிதிசுக்சகோர்ன் மற்றும் தோம் பெட்ச்புக்டெபோங் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசிய பிரிவின் பணிப்பாளர் திலினி ஹலகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement