• Oct 31 2024

கெசல்கமு ஓயா கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

Sharmi / Oct 31st 2024, 10:25 am
image

Advertisement

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கி வரும் பிரதான ஓயாவான கெசல்கமு ஓயா கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரி  தெரிவித்தார்.

இது தொடர்பில் அதிகாரியிடம் கேட்டபோது, கெசல்கமு ஓயா கால்வாயில் தனியார் நீர் மின் நிலையத்திற்கு அடுத்ததாக சடலம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த சடலத்தை அடையாளம் காண பொது மக்களின் உதவியை பொகவந்தலாவ பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்நிலையில் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கெசல்கமு ஓயா கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கி வரும் பிரதான ஓயாவான கெசல்கமு ஓயா கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரி  தெரிவித்தார்.இது தொடர்பில் அதிகாரியிடம் கேட்டபோது, கெசல்கமு ஓயா கால்வாயில் தனியார் நீர் மின் நிலையத்திற்கு அடுத்ததாக சடலம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.குறித்த சடலத்தை அடையாளம் காண பொது மக்களின் உதவியை பொகவந்தலாவ பொலிஸார் நாடியுள்ளனர்.இந்நிலையில் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement