கடும் மழையினால் களுத்துறை புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புளத்சிங்கள பரகொட வீதியின் நாலியத்த பிரதேசத்தில் தற்போது எட்டு அடிக்கு கீழ் நீரில் மூழ்கியுள்ளதுடன் 44 வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரசாத் ரங்கன பெரேரா தெரிவித்துள்ளார்.
பிராந்திய செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படையின் அனர்த்த மீட்புக் குழு ஒன்று பரகொட பிரதேசத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய ஒருவரின் உயிரை நிவாரணக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கியவரை பாதுகாப்பாக மீட்ட நிவாரணக் குழு தயார் நிலையில் கடற்படை கடும் மழையினால் களுத்துறை புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.புளத்சிங்கள பரகொட வீதியின் நாலியத்த பிரதேசத்தில் தற்போது எட்டு அடிக்கு கீழ் நீரில் மூழ்கியுள்ளதுடன் 44 வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரசாத் ரங்கன பெரேரா தெரிவித்துள்ளார்.பிராந்திய செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படையின் அனர்த்த மீட்புக் குழு ஒன்று பரகொட பிரதேசத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய ஒருவரின் உயிரை நிவாரணக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.