• May 17 2024

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் தீர்மானம் - சர்வாதிகாரத்தின் உச்சம் - ஜே.வி.பி! samugammedia

Tamil nila / Jun 29th 2023, 5:00 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, தனது அதிகாரங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரில்வின் சில்வா இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

புதிய புதிய தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தொடரவே ரணில் முயற்சிக்கின்றார்.

எனவே அவர்களின் முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. 

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதிலும், கடன்களை மறுசீரமைக்கச் சொல்லி வங்கிகளை அழிக்கும் முயற்சியிலும் நாட்களைக் கடத்துகிறார்கள். 

மக்களின் ஓய்வூதிய நிதியையும் குறைக்க முயற்சிக்கின்றனர். 

அரசியலின் யதார்த்தம், மக்களின் விருப்பங்கள் என்பன, அரசியலமைப்பு சதியால் ஆளப்படுகிறது

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாகச் செயற்படுகின்ற நிலையில், புதிய மோசடி ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 23ஆம் திகதி பிரேரணையாக வெளியிடப்பட்டுள்ளது. 

விசேட சூழ்நிலையில் தற்போதைய நான்காண்டு பதவிக்காலத்தை 12 மாதங்களுக்கு நீடிப்பதற்கு, 

அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பான உள்ளூராட்சி சட்டப் பிரிவுகளில் அவசர அவசரமாக திருத்தம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

தற்போதுள்ள சட்டத்தின்படி, அதிகபட்சமாக 05 ஆண்டுகள் செய்ய முடியும். 

இந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம் காலவரையறையின்றி காலத்தை நீடிப்பதற்கும் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் மோசடி முயற்சியும் இடம்பெற்று வருகின்றது.

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் தீர்மானம் - சர்வாதிகாரத்தின் உச்சம் - ஜே.வி.பி samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, தனது அதிகாரங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரில்வின் சில்வா இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.புதிய புதிய தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தொடரவே ரணில் முயற்சிக்கின்றார்.எனவே அவர்களின் முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதிலும், கடன்களை மறுசீரமைக்கச் சொல்லி வங்கிகளை அழிக்கும் முயற்சியிலும் நாட்களைக் கடத்துகிறார்கள். மக்களின் ஓய்வூதிய நிதியையும் குறைக்க முயற்சிக்கின்றனர். அரசியலின் யதார்த்தம், மக்களின் விருப்பங்கள் என்பன, அரசியலமைப்பு சதியால் ஆளப்படுகிறதுஉள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாகச் செயற்படுகின்ற நிலையில், புதிய மோசடி ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 23ஆம் திகதி பிரேரணையாக வெளியிடப்பட்டுள்ளது. விசேட சூழ்நிலையில் தற்போதைய நான்காண்டு பதவிக்காலத்தை 12 மாதங்களுக்கு நீடிப்பதற்கு, அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பான உள்ளூராட்சி சட்டப் பிரிவுகளில் அவசர அவசரமாக திருத்தம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. தற்போதுள்ள சட்டத்தின்படி, அதிகபட்சமாக 05 ஆண்டுகள் செய்ய முடியும். இந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம் காலவரையறையின்றி காலத்தை நீடிப்பதற்கும் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் மோசடி முயற்சியும் இடம்பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement